உலக நன்மை வேண்டி மகாகாளியம்மன் கோவிலில் மகாசண்டி ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2025 03:07
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி மகாகாளியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மகாசண்டி ஹோமம் நடந்தது.
இக்கோவிலில் நவசண்டி மகாபெருவிழா நேற்று துவங்கியது. காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக லட்சுமி ேஹாமம் நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து இரவு 64 கோடியோகினி, பைரவர் பூஜை, பலிதானம் நடந்தது. இன்று காலை 7:30 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து அகாதம்பரி பலிதானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனையும் கடம் புறப்பாடாகி கலசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.