மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2025 12:07
கோவை; மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
கோவையின் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் மதுக்கரை பகுதியில் மலைமேல் இருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 10ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏழாம் நாளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தீப ஒளியில் மூலவர் தர்மலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.