ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் சார்பில் வரும் 17ல் அனுக்கிரஹ பாஷ்யம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2025 12:07
கோவை; கோதண்டராமர் கோவிலில், சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டிருக்கும், ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் வரும் 17ம் தேதி மாலை 6:00 மணிக்கு, அனுக்கிரஹ பாஷ்யம் செய்கிறார்.
ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில் சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் ஸ்ரீ சக்ர மஹாமேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள், சாதுர் மாஸ்ய விரத மஹோத்ஸவத்தை கடந்த 9ம் தேதி துவக்கினார். தொடர்ந்து, அன்றாடம் சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடந்து வருகிறது. பக்தர்களுக்கு அட்சதை பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 17ம் தேதி மாலை 6:00 முதல் 6:30 மணி வரை வழக்கமான பூஜைகளை தொடர்ந்து, சுவாமிகள் அனுக்கிரஹ பாஷ்யம் செய்கிறார். இதில் பக்தர்கள் பங்கேற்று, சுவாமிகளின் அனுக்கிரஹ பாஷ்யத்தை கேட்டு பலனடையலாம் என்று, கோதண்டராமர் கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.