பதிவு செய்த நாள்
20
டிச
2012 
11:12
 
 பழநி : பழநி கோவில் இரண்டாம் "ரோப் கார்" கமிட்டி, முதல் கூட்டம் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டம், டிச., 22 ல் நடக்கிறது. பழநி கோவிலுக்கு செல்ல, படிப்பாதை, யானைப்பாதை, விஞ்ச்கள், ரோப்கார் உள்ளன.முதல் ரோப்கார் 2004, நவ., 1 முதல் இயக்கப்பட்டு, பக்தர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றது. ஆண்டுக்கு, ரோப்கார் மூலம், மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், முதல் ரோப்கார் அருகில், இரண்டாம் ரோப்கார், 20 கோடி ரூபாய் செலவில், நிறுவ ஏற்பாடு நடக்கிறது. ஒரு மணி நேரத்தில், 800 பக்தர்கள் செல்லும், நவீன தொழில் நுட்பத்துடன், ரோப் க õர்,அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு 11 பேர் கொண்ட கமிட்டி அமைத்துள்ளது. இதில், மின்வாரிய தலைமைபொறியாளர், இணை கமிஷனர், நிர்வாக பொறியாளர் ,ரோப்கார் நிபுணர், திண்டுக்கல் மாவட்ட மின் ஆய்வாளர் உள்ளிட்ட, 11 பேர் இடம் பெற்றுள்ளனர். கமிட்டி முதல் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் டிச., 10 ல் நடந்தது. அடுத்த கட்ட, ஆலோசனை கூட்டம், பழநி கோவில் நிர்வாக அலுவலகத்தில் டிச., 22 ல் நடைபெற உள்ளது. ரோப்கார் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து, கமிட்டி அறிக்கை, இந்துசமய அறநிலைத்துறை கமிஷனர் ஒப்பதல் பெற்ற பின், இரண்டாம் ரோப்காருக்கான குளோபல் டெண்டர் விடப்படும்.
கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,இரண்டாம் ரோப்கார் அமைப்பற்கான கமிட்டி கூட்டம், டிச., 22 ல் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆய்வு கூட்டத்தின் முடிவுகள், இந்துசமய அறநிலைத்துறை கமிஷனருக்கு அனுப்பப்பட்டு, அரசின் ஒப்புதல் பெற்ற பின், டெண்டர் கோரப்படும். 2014 ல், இரண்டாவது ரோப்கார் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.