தென் திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் தங்க ரதம் உற்சவ புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2025 01:07
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதியில் தங்க ரதம் உற்சவ புறப்பாடு நடந்தது. மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவில் உள்ளது. இக்கோவில் நடை திறந்து சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தோமாலை, சகஸ்ர நாம அர்ச்சனை, நிவேதனம், சாற்றுமுறை, ஆரத்தி, ஆனி வர ஆஸ்தானம் ஆகிய பூஜைகள் நடந்தன. தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கியதை அடுத்து மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க ரதத்திற்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து புறப்பாடு நடந்தது. பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தங்க ரத தேரை நான்காவது வீதிகள் வழியாக இழுத்து சுற்றி வந்தனர். இதில் பக்தர்கள் பங்கேற்று மலையப்ப சுவாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மற்றும் கே.ஜி. நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.