பூமிக்குள் புதையுண்ட நிலையில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2025 02:07
மேலூர்; செமினி பட்டியில் ஆண்டிபாலகர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சிக்காக கோயில் எதிரே முட்புதரை இன்று கிராம மக்கள் சுத்தம் செய்யும்போது பூமிக்குள் புதையுண்ட நிலையில் கல்லால் ஆன சிவலிங்கம் மற்றும் விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டுள்ள ஸ்தபதி இச் சிவலிங்கம் 300 ஆண்டு பழமையானது என்றார். அதனால் தொல்லியல் துறையினர் இப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.