அன்னூர், பெரியம்மன் கோவில் மற்றும் சின்னம்மன் கோவில், கரியாம்பாளையம், ராக்கியண்ண சாமி கோவிலின் 55 வது ஆண்டு பொங்கல் அபிஷேக ஆராதனை விழாவில் கடந்த 14ம் தேதி காலை கணபதி ஹோமமும், காப்பு கட்டுதலும் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு, சின்னம்மன் கோவிலில் அபிஷேக பூஜை நடந்தது. ஆனைமலை கருப்பராயன் கோவிலில் இருந்து பெரியம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்துச் செல்லப்பட்டது. பெரிய அம்மன் கோவிலில், 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வேண்டியபடி அக்னி குண்டத்தில் இறங்கி வழிபட்டனர். காலை 11.00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் துவங்கி, மதியம் முடிந்தது. பெரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையடுத்து, அபிஷேக ஆராதனை நடந்தது. 2,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (23ம் தேதி) கரியாம்பாளையம், ராக்கியண்ண சாமி கோவிலில், காலையில் பொங்கல் வைத்தலும், அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. பக்தர்கள் பூங்கரகம் எடுத்து வருகின்றனர்.