ராமர் கோவில் சேதம்: அதிகாரிகள் மீது வழக்கு
பதிவு செய்த நாள்
23
ஜூலை 2025 02:07
சென்னபட்டணா; சென்னபட்டணாவின் கூட்லுாரில் உள்ள புராதன ராமர் கோவில் சிதிலம் அடைந்திருப்பது குறித்து, உப லோக் ஆயுக்தா நீதிபதி பனீந்திரா, அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னபட்டணா தாலுகாவின், கூட்லுார் கிராமத்தில் நான்காம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீராமர் கோவில் அமைந்துள்ளது. புராண பிரசித்தி பெற்ற கோவில், தற்போது சிதிலம் அடைந்துள்ளது. இதை பராமரிக்க சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இதற்கிடையே இம்மாதம் 7ம் தேதியன்று, உப லோக் ஆயுக்தா நீதிபதி நீதிபதி பனீந்திரா, ஏரிகளை ஆய்வு செய்ய சென்னபட்டணாவுக்கு சென்றிருந்தார். அப்போது கூட்லுாரில் புராதன கோவில் சிதிலமடைந்திருப்பதை கவனித்தார். அதிருப்தி அடைந்த அவர், தாமாக முன் வந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து கொண்டார். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, நீதிபதி பனீந்திரா கூறியதாவது: ராமர் கோவில் மிகவும் புராதனமானது. கங்கர்கள் சாம்ராஜ்யத்தில் கன்வா ஆற்றங்கரையில் கட்டப்பட்ட கோவில்களில், இது வும் ஒன்றாகும். கோவிலின் வெளிப்புற கல் கம்பத்தின், வலது புறத்தில் உள்ள சுவர், தடுப்புச்சுவர் இடியும் நிலையில் உள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள கற்சுவர் சாய்ந்து வருகிறது. கோவிலின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், பெரிய அசம்பாவிதம் ஏற்படலாம். பு ராதன கோவிலை பாதுகாப்பதில், தொல்லியல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். இது கர்நாடக லோக் ஆயுக்தா சட்டப்படி குற்றமாகும். எனவே அதிகாரிகள் மீது, வழக்குப் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
|