மேலூர்; சருகு வலையபட்டி ஊராட்சி அரியூர் பட்டியில் சூலப்பிடாரி அம்மன் கோயில் ஆடி மாத திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மந்தையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் பூத்தட்டு மற்றும் பூஜை பொருட்களை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் சாமி ஆட்டம் நடந்தது. பிறகு சருகுவலையபட்டி, அரியூர் பட்டி, மெய்யப்பன்பட்டி பகுதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.