புதுச்சேரி வேதபாரதி சார்பில், நடைபெறும் இந்நிகழ்ச்சியையொட்டி, இன்று மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளுகிறார். சுவாமிக்கு, புதுச்சேரி வேதபாரதி சார்பில், பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, மண்டபத்தில் எழுந்தருள செய்யப்படுகிறது. அங்கு திருவாதாராதனம், தோமாலை மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், அர்ச்சனை தொடர்ந்து, கடையநல்லுார் ராஜகோபால்தாஸ் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் மற்றும் ஏகாந்த சேவை நடக்கிறது. நாளை (27ம் தேதி) காலை சுப்ரபாதம், வாசுதேவ புண்ணயாகவாசனம், பூதசுத்தி முதலான கிரியைகள், நித்திய திருவாதாராதனம், அபிேஷக சங்கல்பம், அபிேஷக கலச ஸ்தாபனம், சிறப்பு திருமஞ்சனம், நீராட்டம், தோமாலை, திவ்ய பிரபந்த சேவை, அர்ச்சனை நடக்கிறது. பின் முதல்கால பூஜை, வேத திவ்ய பிரபந்த ஆகம சாற்றுமுறை, தீபாராதனை, சிறப்பு புஷ்பயாகம், இரண்டாம் கால பூஜை, மகா மங்கள ஹாரத்தி, மகா ஆசீர்வாதம் நடக்கிறது. பூஜைகள் அனைத்தும், திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சார்யா பகடல் தலைமையில் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதபாரதி தமிழ்நாடு செயலாளர் வெங்கட்ராமன், புதுச்சேரி தலைவர் பட்டாபிராமன், பஜனோத்ஸவ கமிட்டி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.