பதிவு செய்த நாள்
27
ஜூலை
2025
06:07
காஞ்சிபுரம்; அம்மன் கோவில்களில், ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடித் திருவிழா, ஜூலை- 25ம் தேதி, ஏகாத்தம்மனுக்கு பொங்கலிடப்பட்டது. அன்றைய தின இரவு, மலர் அலங்காரத்தில், ஏகாத்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன் தினம், பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. இன்று காலை, பூங்கரகம் ஊர்வலமும், பகல், 2:30 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல, ஒழையூர் கிராம இருளர்கள் குடியிருப்பு பகுதிகளில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.