மாரியம்மனுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 12:07
உத்திரமேரூர்; புலிப்பாக்கத்தில் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். உத்திரமேரூர் தாலுகா, புலிப்பாக்கம் மாரியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான, ஆடி திருவிழா வெகு சிறப்பாக நேற்று நடந்தது. அதில், காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின், காலை 9:00 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து வேப்பஞ்சேலை அணிந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு மாலை சாற்றினர்.