ஒரு லட்சம் ருத்ர ஜெப பாராயணம்; தங்கள் கைகளால் சிவனுக்கு அபிஷேகம் செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 01:07
கோவை; கோவை ஆர். எஸ். புரம் ராஜஸ்தானி சங்கத்தில் ஒரு லட்சம் ருத்ர ஜெப பாராயணம் நடைபெற்றது.
ஆடி மாதத்தை ஸ்ரவண மாதம் என்று அழைக்கிறோம். இந்த மாதத்தில் சிவபெருமானுக்கு ருத்ர ஜெப பாராயணம் செய்வது மிகவும் நல்லது. இதையொட்டி கோவை ஆர். எஸ். புரம் ராஜஸ்தானி சங்கத்தில் ஒரு லட்சம் ருத்ர ஜெப பாராயணம் நடைபெற்றது. இதில் வேத பண்டிதர்கள் ருத்ர ஜெபத்தை ஜெபித்தனர். பொதுமக்கள் தங்கள் கைகளால் சிவலிங்கத்திற்கு புனித நீரை ஊற்றினர். இந்த நிகழ்வானது ஞாயிறு காலை 11 மணி முதல் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்காக கோவை திருப்பூர், உதகை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு சிவலிங்கத்திற்கு தங்கள் கைகளால் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கோவையில் உள்ள தனியார் நிறுவனமான ஜகன்நாத் குழுமங்கள் நடத்தியது.