இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திருப்பதியில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 03:07
திருப்பதி; இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது குடும்ப உறுப்பினர்களுடன் திருமலையில் தரிசனம் செய்தார்.
திருப்பதி வந்த இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி எம் வெங்கையா நாயுடு, திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடுவுடன் சேர்ந்து திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாதம் வளாகத்தில் (எம்டிவிஏசி) பக்தர்களுடன் உணவருந்தினார். பக்தர்களுடன் உரையாடிய அவர் ஸ்ரீவாரி சேவகர்களின் சேவைகளையும் பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் அன்னபிரசாதம் சுகாதாரமானது மற்றும் சுவையானது. ஸ்ரீவாரி சேவகர்கள் என்ற முறையில் அர்ப்பணிப்புடன் தங்கள் சக பக்தர்களுக்கு சேவை செய்ய பல பக்தர்கள் தாமாகவே முன்வருவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் தேவஸ்தான அறக்கட்டளை வாரிய உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி சிஎச் வெங்கையா சௌத்ரி, பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.