திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 12:07
வில்லியனுார்; திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி சமேத கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு காமாட்சியம்மனுக்கு வளையல் அணியும் விழா நேற்று நடந்தது.
திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை 7;00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட காமாட்சி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. இதில் முக்கிய விழா 27ம் தேதி ஆடிப்பூர தேர் திருவிழா நடந்தது. ஆடிப்பூர விழாவில் நேற்று காமாட்சியம்மனுக்கு வளையல்கள் அணியும் விழா நடந்தது. ஒரு லட்சம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (29ம் தேதி) மாலை 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சரவணன் தலைமையில் கிராம வாசிகள் செய்துவருகின்றனர்.