காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 12:07
காஞ்சிபுரம்; ஆடிப்பூரத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவத்தையொட்டி கடந்த 19ம் தேதி முதல், தினமும் மாலை 5:30 மணிக்கு திருவடி கோவில் வரை ஆண்டாள் வீதியுலா நடந்து வந்தது. வீதியுலா முடிந்து, மீண்டும் திருக்கோவிலுக்கு எழுந்தருளும் ஆண்டாளுக்கு, சன்னிதியில் ஊஞ்சல் சேவை உத்சவம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. ஆடிப்பூரம் தினமான நேற்று மாலை 6:00 மணிக்கு வரதராஜ பெருமாள், ஆண்டாள் திருவடி கோவில் புறப்பாடு மற்றும் திருக்கோவில் திருமுற்றவெளியில் மாலை மாற்றல், திருக்கல்யாண உத்சவமும், தொடர்ந்து ஊஞ்சல் சேவை உத்சவமு,மு கண்ணாடி அறையில் தரிசனம் மற்றும் சேர்த்தி நடந்தது. இன்று மாலை 5:30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார், ஆண்டாள் மாட வீதி புறப்பாடு திருக்கல்யாண ஊர்கோலம் நடைபெறுகிறது. உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.