கோவையில் நாம சங்கீர்த்தன வைபவம் துவக்கம்; ஏகாதச திரவிய ருத்ரபிஷேகம், கோ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2025 10:07
கோவை; இடையர்பாளையம் வி. ஆர். ஜி. கல்யாண மண்டபத்தில் நாம சங்கீர்த்தன வைபவம் மற்றும் ஸ்ரீ மகா ருத்ரம், வள்ளி சீதா கல்யாண மஹோத்சவம் விழா துவங்கியது. ருத்ர ஆவாஹனம், ஸ்ரீ ருத்ர ஜெபம், ஏகாதச திரவிய ருத்ரபிஷேகம், கோ பூஜை நடைபெற்றது.
கோவை. ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் இணைந்து வழங்கும் 26ம் ஆண்டு நாம சங்கீர்த்தன வைபவம் மற்றும் ஸ்ரீ மகா ருத்ரம், வள்ளி சீதா கல்யாண மஹோத்சவம் கோவை இடையர்பாளையம் வி. ஆர். ஜி. கல்யாண மண்டபத்தில் நான்கு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.முதல் நாள் நிகழ்வாக வியாழக்கிழமையான இன்று காலை 5 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது அதை தொடர்ந்து ஸ்ரீ ஸ்ரீ ஞானானந்தா ஸ்ரீ ஸ்ரீ பரமாச்சாரியார் விக்கிரகங்களுக்கு பூஜை மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதை ஜகத்குரு டிரஸ்ட் ராமகிருஷ்ண கனபாடிகள் கனவாடிகள் நடத்தி வைத்தார். இதில் ருத்ர ஜெபத்தை ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு உச்சரித்தனர். தொடர் நிகழ்வாக மஹன்யாச ஜெபம், ருத்ர ஆவாஹனம், ஸ்ரீ ருத்ர ஜெபம், ஏகாதச திரவிய ருத்ரபிஷேகம், கோ பூஜை, ஸ்ரீ ருத்ர ஹோமம், கலசபிஷேகம் மகாதீபாரதனை ஆகியன நடைபெற்றது.தொடர்ந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்வாக ஸ்ரீ வள்ளி கல்யாண மஹோத்சவம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சனிக்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு வேத பாராயணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து உஞ்ச விருத்தி நடைபெறுகிறது. காலை 9 மணி அளவில் சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் குழுவினர் சார்பில் ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்சவம் நடைபெறுகிறது. நிறைவாக மாலை 4 மணி அளவில் ஆஞ்சநேய உற்சவம் ஹைதராபாத் ஸ்ரீ ஸ்ரீராம் பாகவதர் குழுவினர் சார்பில் நடத்தப்படுகிறது. தொடர்ந்து மங்கள ஆர்த்தியுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது என விழா குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.