காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச உத்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2025 11:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், 50 ஆண்டுகளுக்குப் பின், கஜேந்திர மோட்சம் உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து உபயதாரர் வாயிலாக 22 லட்சம் ரூபாய் செலவில் குளம் சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆடி அஸ்தம் தினமான நேற்று கஜேந்திர மோட்சம் மற்றும் அஷ்டபுஜ பெருமாள் கருட சேவை உத்சவம் நடந்தது. உத்சவத்தையொட்டி நேற்று, மாலை 6:30 மணிக்கு அஷ்டபுஜ கருடவாகனத்தில் எழுந்தருளி மாட வீதி வலம் வந்தார். கஜேந்திர வரதர் குளத்தில் எழுந்தருளி, முதலையின் தலையை வெட்டி, யானைக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வு விமரிசையாக நடந்தது. உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், வார்டு கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்டோர் இணைந்து செய்திருந்தனர்.