தளவாய்புரம்; புனல்வேலி திரவுபதி அம்மன் கோயில் ஆடி பூக்குழி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அம்மனுக்கு இளநீர், பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் மகா தீபாராதனை நடந்தது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடக்கிறது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆக.8ல் சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.