போடி ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை; நெற்கதிர் அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2025 11:07
போடி; போடி ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு நெற்கதிர் அலங்காரத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
நாட்டில் வறுமை நீங்கி, விவசாயம் செழிக்க வேண்டி ஆடி மாதத்தில் ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை நடக்கும். விவசாயி தான் உற்பத்தி செய்த முதல் நெற்கதிரை இறைவனுக்கு பாரம்பரிய முறையில் படைத்து வழிபடுவது நிறை புத்தரிசி பூஜை. அவ்வாறு படைக்கப்பட்ட நெற் கதிர்களை பெற்று வீடுகளுக்கு கொண்டு சென்றால் செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம். இதனை ஒட்டி நேற்று போடி ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்த சபை, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு நெற்கதிர் அலங்காரத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. குருநாதர் மகாலிங்கம் தலைமை வகித்தார். தலைவர் ஹரிஹரன், செயலாளர் சேதுராம், பொருளாளர் கருப்பையா, துணைத்தலைவர்கள் சுந்தரம், ராஜாமணி, துணை செயலாளர்கள் மணிகண்டன், சன்னாசி முன்னிலை வகித்தனர். சுவாமி அலங்காரத்தினை கமலக்கண்ணன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.