இன்று காலை மண்டபடிதாரர் சரவணமூர்த்தியுடன், உடையாம்பட்டி கிராம மக்கள் வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் வந்து கொடியை கோயிலுக்குள் கொண்டு வந்தனர். கொடிமரம் முன்பாக ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் முடிந்ததும் காலை 10:15 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. ஆடி மாத பவுர்ணமி நாளை திருவிழாவின் 9ம் நாள் தேரோட்ட நிகழ்வாக வைத்து மொத்தம் 13 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவில் நாள்தோறும் இரவு அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும், மண்டகபடிதாரர் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக ஆக.7 ல் திருக்கல்யாணம், 9ல் தேரோட்டம், 11ல் வசந்தம் முத்துபல்லக்கு வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் தங்கலதா, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.