கோவையில் ஆஸ்திக சமாஜம் சார்பில் வள்ளி கல்யாண மஹோத்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2025 12:08
கோவை; ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் இணைந்து வழங்கும் 26-ம்ஆண்டு நாம சங்கீர்த்தனை வைபவம் மற்றும் வள்ளி கல்யாண மஹோத்சவம் கோவை இடையர்பாளையம் வி.ஆர்.ஜி. கல்யாண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருமண வைபத்தை காண கோவை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண வைபவத்தை கோவை திருப்புகழ் அன்பர்கள் ராகவன் -வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. சுவாகதம் கிருஷ்ணா சத்சங்க குழுவினர் மதுரை ஸ்ரீ சோம நாராயணன்,தஞ்சை ஸ்ரீ முரளி மற்றும் நங்கவரம் ரவி பாகவதர்கள் தலைமையில் நடைபெற்றது.. நிகழ்ச்சியை நிறைவாக வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.