திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கண்டெய்னர் லாரிகளில் வீதி உலா வந்த 63 நாயன்மார்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2025 12:08
திருவாரூர்; பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு 63 நாயன்மார்கள் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியார் திருக்கல்யாண வீதி உலாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வ தோஷ தலமாகவும் விளங்கும் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சைவ சமய குறவர்கள் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் சென்ற ஆடி சுவாதி திருநாளில் முதல் நிகழ்வாக சுந்தரமூர்த்தி நாயனார் பறவை நாச்சியார் திருக்கல்யாணம் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள கமலாம்பாள் சன்னதியில் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று இரவு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இருந்து அதிபத்தர், அப்பூதியடிகள், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞான சம்பந்த மூர்த்தி, திருநாவுக்கரசர், கண்ணப்பர், காரைக்கால் அம்மையார், திருமூலர் நமிநந்தியடிகள் போன்ற 63 நாயன்மார்களின் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் இரண்டு கண்டெய்னர் லாரிகளில் 63 நாயன்மார்கள் அலங்காரம் சேய்விக்கப்பட்டு வைக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. அதற்கு முன்பாக சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியார் திருக்கல்யாண கோலத்தில் எழுத்தருளி வீதி உலா சென்று அருள் பாலித்தனர்.
இந்த வீதி உலா காட்சி தேரோடும் வீதிகளான கீழவீதி மேல வீதி தெற்கு வீதி வடக்கு வீதி என நான்கு விதிகளும் வலம் வந்த பின்பு கோவிலை சென்றடைந்தது.இதில் பத்துக்கும் மேற்பட்ட நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பங்கு பெற்று மங்கள இசை இசைக் வீதி உலா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் நாயன்மார்கள் வீதி உலாவின் போது தேவாரம் திருவாசகம் போன்றவற்றில் இடம்பெற்ற பாடல்களை பாடியபடி சிவனடியார்கள் பங்கு பெற்றனர்.