வேலூர் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு; வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் விஷ்ணு துர்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2025 12:08
வேலூர்; ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விஷ்ணு துர்கை அம்மன் கோவில், படவேட்டம்மன் மற்றும் ஆனைகுளத்தம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர், புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள விஷ்ணு துர்கை அம்மன் கோவிலில் இன்று ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விஷ்ணு துர்கை அம்மனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடந்தது. இதே போல் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஆணைகுளத்தம்மன் மற்றும் படவேட்டம்மன் கோவில்களில் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகா தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசணம் செய்தனர்.