கோவை; கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்ம பெருமாள் தாயாவல்லி தாயார் சன்னதியில் ஆடி சுவாதி வைபவம் நடந்தது. இந்த சிறப்பு வைபவத்தில் விஷ்வக் சேனர் ஆவாஹனம், கலச ஆவாஹனம், புண்யாவஜனம் முடிந்து சிறப்பு ஹோமங்கள் நடந்தது. இதில் சுதர்சன ஹோமம் நரசிம்மர், லட்சுமி, பூவராக, ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ கருடன், ஆஞ்சநேயர், தோஷ நிவர்த்தி ஹோமங்களான திருமண தோஷ நிவர்த்தி புத்திர தோஷ நிவர்த்தி சகல காரிய, தொழில் அபிவிருத்தி ஹோமங்கள் முடிந்து மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு பால் தயிர் தேன் இளநீர் மஞ்சள் சந்தனம் மூலிகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா சங்கல்பம் உலக நன்மைக்காக குங்குமம் சொரணம் (தங்கம்), வெள்ளி மஞ்சள், புஷ்பம் உள்ளிட்டவைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை அன்னதானம் நடந்தது இந்நிகழ்ச்சியை திருக்கோவில் அர்ச்சகர் அனந்தாழ்வான் மற்றும் மாதாந்திர சுவாதி விழா கமிட்டியினர் மேற்கொண்டனர்.