வேதகாலத்தில் ஜாபாலா என்பவளுக்கு பிறந்தவன் சத்யகாமன். இவனுக்கு தந்தை யாரென்று தெரியாது. ஒரு குருவிடம் கல்வி கற்க விரும்பினான். அவனிடம் ஜாபாலா, உன் பேருடன் என் பெயரையும் சேர்த்து சத்யகாம ஜாபாலன் என்று வைத்துக் கொள் என்று சொல்லி, ஹாரித்ரும கவுதம ரிஷியிடம் அனுப்பி வைத்தாள். தந்தையை அறியாததால், பெயரோடு அம்மா பெயரைச் சேர்த்துச் சொன்ன சத்தியகாமனை ரிஷி ஏற்றுக்கொண்டார். உண்மை பேசிய அவனுக்கு உபதேசம் செய்து நல்வழி காட்டினார். எல்லாரும் அப்பா பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக்கொள்வார்கள். இவனோ, அம்மா பெயரை இணைத்துக் கொண்டவன்.