திக்கு தெரியாமல் தவிக்கும்போதுகண்ணைக் கட்டி காட்டுல விட்டதுபோல என்று சொல்வதுண்டு. அந்த சமயத்தில் யாராவது திசை காட்டினால், அது மிக்க உதவியாக இருக்கிறது. அதுபோல, எதுவுமே அறியாமல் இருக்கும் ஒரு மாணவனுக்கு வழிகாட்ட வருபவரே குருநாதர். குருநாதருக்கு தேசிகர் என்ற பெயருண்டு. தேசிகர் என்றால் திசை காட்டுபவர். முருகப் பெருமானை ஞானதேசிகன் என்று போற்றுவர். ஞானம் பெறும் வழியைக் காட்டுபவர் என்பது இதன் அர்த்தம்.