ஆண்களுக்கு அங்கப்பிரதட்சிணம் பெண்களுக்கு அடிப்பிரதட்சிணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2012 12:12
கோயில் குளத்தில் நீராடி, ஈர உடையுடன் பிரகாரத்தை தரையில் படுத்து உருண்டு வரும் வழிபாடு அங்கப்பிரதட்சிணம். காலம் காலமாக எத்தனையோ அருளாளர்களின் பாதம் கோயிலில் பட்டுத் தோய்ந்திருக்கும். அவர்களின் திருவடி பட்ட இடத்தில், தலை முதல் பாதம் வரை படுவதால் பாவம் தீரும் என்பதால் இதைச் செய்கிறார்கள். ஆண்கள் மட்டுமே அங்கப்பிரதட்சிணம் செய்ய வேண்டும். பெண்கள் அடி மேல் அடி எடுத்து வைக்கும் அடிப்பிரதட்சிணம் செய்யலாம்.