திருப்பூர்; ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், பாலவிகாஸ் பெற்றோருக்கான பாதபூஜை நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று, பாதபூஜை நிகழ்ச்சி நடந்தது. வீரபாண்டி, கல்லாங்காடு அடுத்த முத்துநகரில், பாதபூஜை மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தது. காலை, ஆஷர் நகரில் உள்ள, ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியில், பாலவிகாஸ் பெற்றோருக்கு பாதபூஜை மற்றும் பஜனை நிகழ்ச்சி நடந்தது. வேதம் மற்றும் சாய் பஜன், பாலவிகாஸ் பெற்றோர் பாத பூஜை மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிறப்பு சொற்பொழிவு நடந்தது; மங்கள ஆரத்தி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. காந்திநகர் சமிதியில் நடந்த நிகழ்ச்சியில் அதிகாலையில் பாதபூஜை நடந்தது. ராம்நகர் சமதியில், கல்வி ஒருங்கிணைப்பாளர் தமிழரசி சிறப்புரையாற்றினார்; 26 பெற்றோர், 13 குழந்தைகள், ஐந்து முன்னாள் பாலவிகாஸ் மாணவர்கள் உட்பட, 50 பேர் பங்கேற்றனர்.