சின்னமனுாரில் விநாயகர் சதுர்த்தி விழா : பிரமாண்ட ஊர்வலத்திற்கு 201 சிலைகள் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2025 12:08
சின்னமனூர்; சின்னமனூரில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற 201 விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. சின்னமனூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்து முன்னணி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை ஹிந்து முன்னணி செய்து வருகிறது. இந்தாண்டு 201 விநாயகர் சிலைகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செய்து, வர்ணம் தீட்டி தயார் நிலையில் உள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தி நாளில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஹிந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் கணேசன், மாவட்ட தலைவர் சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர். இதே போன்று ஹிந்து எழுச்சி முன்னணி சார்பிலும் நூற்றுக்கணக்கான சிலைகள் தயார் செய்யப்படுகிறது.