சப்த அலைகளால் உருவானதே இந்த பிரபஞ்சம் (உலகம்). உலகின் முதல் ஒலியாக இருப்பது ஓம் என்னும் ஓங்காரம். இதனை பிரணவ மந்திரம் என்பர். நசிகேதன் என்ற சிறுவனுக்கு உயிர்களைப் பறிக்கும் காலதேவனான எமதர்மன் ஓம் என்பதன் பெருமையை விளக்கியதாக கடோபநிஷத் என்னும் நூல் தெரிவிக்கிறது. பகவத்கீதை எட்டாம் அத்தியாயம் 13ம் ஸ்லோகததில் பிரணவத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. ஓம் இல்லாமல் சொல்லும் தெய்வ மந்திரங்களுக்குப் பலன் கிடையாது என்பர். ஓம் நமசிவாய,ஓம் பராசக்தி நம, ஓம் சரவணபவ, ஓம் சக்திவிநாயக நம என்று பிரணவத்தோடு தான் மந்திரங்கள் தொடங்கும். மனத் தூய்மையோடு சொன்னால் மட்டுமே மந்திரம் பலனளிக்கும். மன சுத்தமின்றி பெயரளவுக்கு சொல்லும் மந்திரத்தால் பலனில்லை.