தெய்வம் மனுஷ ரூபேன என்று சொல்வதுண்டு. தெய்வம் நேரில் நம் முன் தோன்றுவதில்லை. மனித ரூபத்தில் வந்து நமக்கு வழிகாட்டும் என்பது இதன் பொருள். நம்முடைய நன்மை கருதிப் பெரியவர்கள் சொல்வதை கடவுளின் சொல்லாக ஏற்று நடக்கவேண்டும் என்பதையே பெரியோர் வாக்கு பெருமாள் வாக்கு என்று குறிப்பிட்டனர்.