வளர்பிறை ஏகாதசி விழா; பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2025 05:08
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில், வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி அருகே டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது. விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு பால், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.