ரங்கநாதர் கோயில் இரண்டாம் பிரகாரத்திலுள்ள அன்னப்பெருமாள் சுற்றில் தானிய லட்சுமி சந்நிதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிரனால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின் போது பெருமாள், இவளது சந்நிதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னப்பெருமாளின் கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை உள்ளது. இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும்.