அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் . அவிநாசி செங்காட்டு திடலில் எழுந்தருளியுள்ள ராக்காத்தம்மனுக்கு ஒன்பது வகையான தீர்த்தங்கள் சுமந்து பெண்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்து வழிபடும் இந்து அன்னையர் முன்னணியின் திருப்பூர் மாநகர், அவிநாசி நகர், அவிநாசி தெற்கு, வடக்கு ஒன்றியங்கள், திருமுருகன் பூண்டி நகரம் ஆகியவை இணைந்து முதலாம் ஆண்டு ஆடி மாத அபிஷேக திருவிழா நடைபெற்றது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், தீர்த்த குடம் உள்ளிட்டவைகளை எடுத்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக கோவை மெயின் ரோடு,மேற்கு ரத வீதி, சேவூர் ரோடு ஆகியவற்றில் ஊர்வலமாக சென்று பின்னர் ராக்காத்தம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இந்த ஊர்வலத்தை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் முன்னிலையில், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பொன் புவனேஸ்வரி சீனிவாசன்,இந்து அன்னையர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கோட்டச் செயலாளர் சேகர், மாவட்ட செயற்குழு சிங்கத்தமிழன் ,இந்து அன்னையர் முன்னணி ஆயம் பொறுப்பாளர்கள் முரளிதரன், சண்முகம் ,ஜெயப்பிரகாஷ், சங்கர், மீனாட்சியம்மாள், ஸ்ரீமதி, தேவிகா, சித்ரா, மகாலட்சுமி, சுமதி மற்றும் ராக்காத்தம்மன் கோவில் கமிட்டியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.