திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டு பேட்டரி கார் நன்கொடை அளித்த பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2025 11:08
திருப்பதி; பெங்களூரைச் சேர்ந்த பக்தர் சந்திரசேகர் இன்று செவ்வாய்க்கிழமை திருமலை தேவஸ்தானத்திற்கு ரூ.11 லட்சம் மதிப்புள்ள இரண்டு ஆறு இருக்கைகள் கொண்ட பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். சிறப்பு பூஜைகளுக்கு பின் வாகனமானது தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.1.10 கோடி நன்கொடை; ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கேப்ஸ்டன் சர்வீசஸ் தலைவர் கோடலி ஸ்ரீகாந்த், இன்று செவ்வாய்க்கிழமை காலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் டிரஸ்டுக்கு ரூ.1 கோடியும், வெங்கடேஸ்வர கோ கர்ஷக்னம் டிரஸ்டுக்கு ரூ.10 லட்சமும் நன்கொடை அளித்தார்.நன்கொடை காசோலைகள் ஸ்ரீவாரி கோயிலின் ரங்கநாயக்குலா மண்டபத்தில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் வழங்கப்பட்டது.