ஆடி கடைசி செவ்வாய்; விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2025 11:08
கோவை; ஆடி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்பஅலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல், கோவை ராமநகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆடி மாதம் நான்காவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு மூலவர் முருகன், உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.