திருமலை திருப்பதி வரும் வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் பாஸ்டேக் கட்டாயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2025 03:08
திருப்பதி; திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு இனிமேல் பாஸ்டேக் கட்டாயம். இந்தப் புதிய கொள்கை ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலிபிரி சோதனைச் சாவடியில் பல்வேறு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு சிறந்த பாதுகாப்புத் தரங்கள், கூட்ட நெரிசலைத் தடுப்பது மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்குவதற்காக, ஆகஸ்ட் 15 முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இனி திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. வாகன ஓட்டிகளின் வசதிக்காக, அலிபிரி சோதனைச் சாவடியில் பாஸ்டேக் வழங்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகள், மிகக் குறுகிய காலத்தில் இந்த வசதியைப் பெற்ற பின்னரே திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.