கண்ணீர் விட்ட கருமாரி அம்மன் கல் சிலை; வேலூரில் பக்தர்கள் பரபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2025 02:08
வேலூர்; குடியாத்தம் அருகே கருமாரி அம்மன் கல் சிலையில் இருந்து இடதுபுற கண்ணீல் தண்ணீர் வரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் பழமை வாய்ந்த கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல வந்த கோயில் பூசாரி, பூஜை மேற்கொள்ளும் பொழுது கருமாரி அம்மன் சிலை இடது புற கண்ணில் தண்ணீர் வருவது கண்டு பக்தர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்து பொதுமக்களிடம் தெரிவித்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து அம்மன் கண்ணில் வரும் தண்ணீரை செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். சுமார் 20 நிமிடமாக அம்மன கண்ணில் இருந்து தண்ணீர் வருவதை பொதுமக்கள் பய பக்தியுடனும் அதிசயத்துடனும் கருமாரி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். அம்மன் கண்ணில் இருந்து தண்ணீர் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.