ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா; 101 ஆடு வெட்டி அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2025 05:08
நத்தம்; நத்தம் அருகே பாதசிறுகுடி பொன்னர்,சங்கர், கருப்பசாமி கோவிலில் 101 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத ஆடி திருவிழாவில் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு வர்ண பூமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பாக பகதர்கள் நேர்த்தி கடனாக கொடுத்த 101 ஆட்டுக்கிடாய்கள் பலியிடப்பட்டது. தொடர்ந்து ஆட்டுக்கறி குழம்புகள் தயார் செய்யப்பட்டு, சாதங்களை இளைஞர்கள் சாத உருண்டைகளாக தயார் செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள மின் விளக்குகள் அனைத்தையும் அணைக்கப்பட்டு, கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சாத உருண்டைகளை மேலே வீசினர். அதனைத் தொடர்ந்து சுற்று வட்டாரத்தில் இருந்து கலந்து கொண்ட ஏராளமான ஆண்களுக்கு கறி குழம்புடன், உருண்டை சாதம் அன்னதானமாக பரிமாறப்பட்டது.இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.