புவனகிரி; புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆராதனை விழா நிறைவு பெற்றது. புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆராதனை விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. 11ம் தேதி புண்ணிய தின ஆராதனை நடந்தது. நேற்று 12ம் தேதி உத்திர ஆராதனை விழா, சுப்ரபாதம், வேத பாராயணத்துடன் துவங்கியது. ரமேஷ் ஆச்சார் தலைமையில் அபிேஷகம், பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராகவேந்திரர் புனிதத்தொண்டு அறக்கட்டளை கவுரவத் தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.