கருப்பண்ணசாமி கோயில் திருவிழா; ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு கறி விருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2025 05:08
நத்தம், நத்தம் அருகே நடுவனூர் கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவில் 50 கிடாய்கள் வெட்டி ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத கறி விருந்து திருவிழா நடந்தது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஆடிப்படையல் விழா நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான ஆடிபடையல் திருவிழா நேற்று நல்லிரவு நடந்தது.இதையொட்டி கருப்பண்ணசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பகதர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட கிடாய்கள் கிராமத்தார்கள் மூலம் வெட்டபட்டது. பின்னர் 40 சிப்பம் அரிசியை கொண்டு 15 -க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கறிக்குழம்பும், சாதமும் தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு படையல் போடப்பட்டு அதிகாலை 1 மணி அளவில் கறிக்குழம்புடன் உருண்டை சாதத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.