சீதா ராம ஆஞ்சநேயர் கோவிலில் ராகவேந்திரா சுவாமிகள் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2025 05:08
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சீதா ராம ஆஞ்சநேயர் கோவிலில், ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது. பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீசீதா ராம ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் மத்திய ஆராதனை விழா நடந்தது. சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. மாலையில் ராகவேந்திர சுவாமிக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு, பல்லக்கு சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.