திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடிப்பட்டம் யானை மீது வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2025 06:08
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவிற்காக கொடிப்பட்டம் யானை மீது வைத்து வீதி உலா வந்து கோவில் சேர்ந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் ஏற்றப்படும் கொடிப்பட்டம் சிறப்பு பூஜைகளுக்கு பின் யானை மீது வைத்து வீதி உலா வந்து கோவில் சேர்ந்தது. நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. விழாவில் வரும் 20ம் தேதி 7ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்திலும், 21ம் தேதி சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. ஆக.,23ல் தேரோட்டம் நடைபெற உள்ளது.