தேசியக்கொடியுடன் செல்வநாயகி அம்மனுக்கு சக்தி பெருவேள்வி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2025 02:08
அன்னூர்; செல்வநாயகி அம்மன் கோவிலில் தேசியக் கொடியுடன் சக்தி பெரு வேள்வி இன்று நடந்தது.
,அன்னூர் அருகே பிள்ளையப்பம் பாளையத்தில், பல நூறு ஆண்டுகள் பழமையான செல்வநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 30 ம் ஆண்டு தமிழ் முறை சக்தி பெரு வேள்வி நேற்று துவங்கியது. இன்று தேசியக்கொடியுடன் விநாயகப் பெருமான், நாராயண பெருமாள், திருமகள், கலைமகள், சிவபெருமான் மற்றும் செல்வநாயகி அம்மனுக்கு வேள்வி பூஜை நடந்தது. இதையடுத்து, கலச நீராட்டும், அலங்கார ஒளி வழிபாடும் நடந்தது. செல்வநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருமுறை பாராயணம் செய்யப்பட்டது. பழனி சாது சண்முகடிகள் அருளுரை வழங்கினார். கோவில் நிர்வாக குழு தலைவர் ராமசாமி, செயலாளர் செல்வராஜ், அறக்கட்டளை தலைவர் ராஜு உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.