திருவாலங்காடு கோவிலில் தண்டு மாரியம்மன் ஐம்பொன் சிலை திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2025 11:08
திருவாலங்காடு; திருவாலங்காடு அடுத்த முத்துக்கொண்டாபுரம் காக்காத்தம்மன் கோவிலில், 44 கிலோ தண்டு மாரியம்மன் ஐம்பொன் சிலை திருட்டு போயுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், முத்துக்கொண்டாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, காவேரிராஜபுரம் செல்லும் சாலையில், பழமை வாய்ந்த காக்காத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐம்பொன்னாலான போத்துராஜா, காக்காத்தம்மன் மற்றும் தண்டுமாரியம்மன் சிலைகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று காலை கோவில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் இருந்த ஒன்றரை அடி உயரமும், 44 கிலோ எடையிலுமான ஐம்பொன் தண்டுமாரியம்மன் சிலை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.