பதிவு செய்த நாள்
18
ஆக
2025
11:08
மைசூரு தசராவில் பங்கேற்க முதல்கட்டமாக வந்து உள்ள, அம்பாரி சுமக்கும் அபிமன்யு உட்பட 9 யானைகளின் ‘பயோடேட்டா’ பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா அடுத்த மாதம் 22 ம் தேதி துவங்கி, அக்டோபர் 2 ம் தேதி வரை 12 நாட்கள் நடக்க உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கடைசி நாள் ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். அன்றைய தினம் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை சுமந்தபடி அபிமன்யு யானை செல்ல, அதனை பின்தொடர்ந்து 13 யானைகள் செல்லும். தசராவில் கலந்து கொள்வதற்காக அபிமன்யு, பீமா, தனஞ்ஜெயா, ஏகலவ்யா, மகேந்திரா, பிரசாந்த், கஞ்சன், லட்சுமி, காவேரி என ஒன்பது யானைகள் முதல்கட்டமாக மைசூருக்கு வந்து உள்ளது. அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளன. யானைகளுக்கு கடந்த 10 ம் தேதி உடல் எடை சரிபார்க்கப்பட்டது. ஒன்பது யானைகளும் நல்ல உடல்தகுதியுடன் இருப்பது தெரிந்து உள்ளது.
ஒன்பது யானைகளின் பயோடேட்டா பற்றிய குறிப்புகள்:
வசிக்குமிடம்: மத்திகோடு யானைகள் முகாம்
பிடிபட்ட ஆண்டு, இடம்: 1970, ஹெப்பாலே வனப்பகுதி
சிறப்பு: அம்பாரியை சுமப்பது, காட்டு யானைகள், புலிகளை பிடிக்கும் பணிக்கு உதவுவது
வசிக்குமிடம்: மத்திகோடு யானைகள் முகாம்
பிடிபட்ட ஆண்டு, இடம்: 2000, பீமனகட்டே
சிறப்பு: 2017 ம் ஆண்டில் இருந்து தசராவில் பங்கேற்பு.
உதவியாளர்: ஜே.எஸ்.ராஜண்ணா
வசிக்குமிடம்: துபாரே யானைகள் முகாம்
பிடிபட்ட ஆண்டு, இடம்: 2012, எசலுார்
சிறப்பு: 2018 ம் ஆண்டில் இருந்து தசராவில் பங்கேற்பு.
வசிக்குமிடம்: தொட்டஅரவே யானைகள் முகாம்
பிடிபட்ட ஆண்டு, இடம்: 2022, மூடிகெரே.
சிறப்பு: 2023 ம் ஆண்டு முதல் தசராவில் பங்கேற்பு. சாந்தமான யானை, தைரியசாலி என்று பெயர் எடுத்து உள்ளது.
வசிக்குமிடம்: பள்ளே யானைகள் முகாம்
பிடிபட்ட ஆண்டு, இடம்: 2018, ராம்நகர்
சிறப்பு: 2022 ம் ஆண்டு முதல் தசராவில் பங்கேற்பு. அம்பாரியை சுமக்கும் தயாராகி வருகிறது. காட்டு யானை, புலி பிடிக்கும் பணிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
வசிக்குமிடம்: துபாரே யானைகள் முகாம்
பிடிபட்ட ஆண்டு, இடம்: 1993, ஷிவமொக்கா
சிறப்பு: கடந்த 15 ஆண்டுகளாக தசராவில் பங்கேற்பு
வசிக்குமிடம்: துபாரே யானைகள் முகாம்
பிடிபட்ட ஆண்டு, இடம்: 2014, எசலுார்
சிறப்பு: இரண்டு ஆண்டுகளாக தசராவில் பங்கேற்பு. பாகன் கட்டளையை உடனே கடைப்பிடிக்கும் யானை என்று பெயர் பெற்று உள்ளது.
வசிக்குமிடம்: பள்ளே யானைகள் முகாம்
பிடிபட்ட ஆண்டு, இடம்: 2015, சர்க்கஸ் கம்பெனி
சிறப்பு: இரண்டு ஆண்டுகளாக தசராவில் பங்கேற்பு. மனிதர்களுடன் கொஞ்சி விளையாடுவது.
வசிக்குமிடம்: துபாரே யானைகள் முகாம்
பிடிபட்ட ஆண்டு, இடம்: 2009, அடிநாரூர் வனப்பகுதி, சோமவார்பேட்
சிறப்பு: பத்து ஆண்டுகளாக தசராவில் பங்கேற்பு. ஜம்பு சவாரி ஊர்வலத்தின் துணை யானை என்ற பெருமை. இரண்டாவது கட்டமாக, ஐந்து யானைகள் மைசூருக்கு வர உள்ளது. – நமது நிருபர் –