பாடி,; பாடி, சி.டி.எச்., சாலையில், படவட்டம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி விழாவை முன்னிட்டு, பாடி சிவன் கோவிலில் இருந்து, படவட்டம்மன் கோவில் வரை, பால்குடம் ஊர்வலம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 1008 பெண்கள் பால்குடம் ஏந்தி, ‘ஓம் சக்தி... பராசக்தி’ என, அம்மனை பிரார்த்தனை செய்தபடி, மேளதாளம் முழங்க ஊர்வலமாக செ ன்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் உட்பட சிறப்பு ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செய்தனர்.