Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனை- 8: வேண்டாம் வீண் ... வில்லியனூர் பெருமாள் கோவிலில் 24ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாயன் காலண்டர் வதந்தி புஸ் ஆனது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 டிச
2012
10:12

லண்டன்: மாயன் காலண்டர் கூற்றுப்படி, உலகம் அழியும் என, பரப்பப்பட்ட வதந்தி, பொய்யானது. மெக்சிகோ நாட்டை பூர்வீகமாக கொண்ட, மாயன் இனத்தினர், 5,126 ஆண்டுகளை கொண்ட காலண்டரை தயாரித்து பயன்படுத்தி வந்தனர். இந்த காலண்டர், கி.மு., 3114ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது. மாயன் காலண்டர், 1.44 லட்சம், நாட்களை கொண்டது. அதன் பின், இந்த காலண்டர் மறு சுழற்சிக்கு உட்பட்டது. நேற்றுடன் இந்த காலண்டர் முடிந்ததால், உலகம் அழிந்து விடும் என, சிலரால் வதந்தி பரப்பப்பட்டது. அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மையம் இதை மறுத்தது. தென் அமெரிக்க நாட்டவர்கள், மாயன் காலண்டரை அதிகம் நம்புகின்றனர். மாயன் காலண்டர் நேற்றுடன் முடிந்ததை, பலர் விழாவாக கொண்டாடினர். சீனாவில் உள்ள ஒரு மத அமைப்பினர்,  உலகம் அழிவதற்குள் சொத்துக்களை எல்லாம் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என,  பிரசாரம் செய்தனர். இந்த அமைப்பை சேர்ந்த, 1,000 பேரை, சீன அரசு கைது செய்தது.

மாயன் காலண்டரை பின்பற்றும் சிலர், உலகம் அழிவதற்குள் ஒட்டு மொத்தமாக இறந்துவிட திட்டமிட்டனர். இது தொடர்பாக இணைய தளங்களில் சிலர் அழைப்பு விடுத்தனர். பேஸ்புக் இணைய தளத்தில், இதற்கான விளம்பரங்கள் வெளியானதால், துருக்கி, அர்ஜென்டினா, பிரான்ஸ்  உள்ளிட்ட நாடுகளில், உயர்ந்த மலை பகுதிகளுக்கு செல்லும் வழிகளை, போலீசார் அடைத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெக்சிகோவில் உள்ள மாயன் கோவில்களில், பலர் வழிபாடு நடத்தினர். துருக்கியில் கன்னி மேரி, தேவலோகத்துக்கு சென்ற இடமாக கருதப்படும், சிரின்ஸ் மலையில், பலர், கூட்டு பிரார்த்தனை செய்தனர். கவுதமாலா நாட்டிலும், மாயன் இன வம்சத்தவர்களாக கூறி கொள்பவர்கள், சில சடங்குகளை நடத்தினர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காததால், உலகம் அழியும் என, பரப்பப்பட்ட தகவல் வதந்தி என்பது நிரூபனமானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ... மேலும்
 
temple news
மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar