வத்தலக்குண்டு; காந்திநகர் பைபாஸ் ரோட்டில் சப்தகன்னிமார் கோயில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர், கருப்பண்ணசாமி, முனியாண்டி, நாகம்மாள், வேட்டைக்காரன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக முதல் கால யாகசாலை பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோமாதா பூஜை, மண்டப பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து மங்கள இசையுடன் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் வானவேடிக்கை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். புனித நீர் தெளிக்கப்பட்டது. சப்தகன்னிமார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகஸ்தர் பாண்டி செய்திருந்தார்.